இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்களை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உரிய அரிசி இருப்புக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதே கையிருப்பு அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இறக்குமதியாளர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.