அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.
இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்.
நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன.
இந்த நிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
Friday, December 27, 2024
அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கான பொறுப்பை கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »