9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பிட்டகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இலஞ்சம் பெற்ற போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட குறித்த வர்த்தகரின் உறவினர் ஒருவரின் காணிக்கான நட்டஈட்டை விரைவில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து அவர்கள் கையூட்டல் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.