Our Feeds


Monday, December 30, 2024

Sri Lanka

மின் கட்டண திருத்தம் - பொதுமக்கள் கருத்து சேகரிக்கும் பணி தீவிரம்!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) ஊவா மாகாணத்தை மையமாக கொண்டு பொதுமக்களின் ஆலோசனைகளை பெறவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்த யோசனைக்கான பொதுமக்கள் கருத்து கோரல் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு வசதியாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி பொதுமக்கள் கருத்து கோரல் நடத்தப்படுகிறது.

மாகாண மட்டத்தில் இடம்பெற்றும் பொது மக்களின் வாய்மூல கருத்து கோரல் இன்று ஊவா மாகாணத்தை மையமாக கொண்டு மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்து கோரலின் போது முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை  கருத்திற்கொண்டு அடுத்த ஆண்டுக்கான மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »