பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிளகாய், மஞ்சள், மசாலா வகைகளுடன் பல்வேறு வகையான மா கலக்கப்படுவது தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தை மையமாக கொண்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
அன்று முதல் நேற்று (28) வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 450 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட குறிப்பிட்டார்.