முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, பாதுகாப்பு வழங்கப்படும் என இன்று(17) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போது அவர் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.