13ம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் இலங்கையின் புதிய அரசாங்கம் அதில் கரிசனை காட்டவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சமஷ்டியைக் கைவிட்டுக் கூட்டு சமஷ்டியை அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.