தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"நாளை காலை, நான் பெற்ற அனைத்து கல்வித் தகைமைகளையும் இந்த சபையில் சமர்ப்பிக்க உள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல.
அதற்கு அப்பால் அனைத்து சான்றிதழ்களையும் சமர்க்கிறேன்."