Our Feeds


Monday, December 30, 2024

Sri Lanka

இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை அறக்கட்டளைகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அறக்கட்டளைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இலங்கை அறக்கட்டளை ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மதிப்பிற்குரிய இலங்கை அரசின் அடித்தளத்தைத் திட்டமிடும், பணி மற்றும் தொலைநோக்கு பார்வையை வழிநடத்தக்கூடிய அறிவுசார் வளங்களை உருவாக்கி, அரசியல்வாதிக்கு சரியான வழிகாட்டலை வழங்கும் நிறுவனமாக இலங்கை அறக்கட்டளை நிறுவனம் மாற்றப்பட வேண்டும்.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அறக்கட்டளை நிறுவனம் தற்போது முன்னணி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முதியோர் கல்வி மற்றும் பயிற்சி மையமாக இயங்கி வருகிறது. அறக்கட்டளை நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இங்கு பணிபுரியும் அனைவரும் அரசாங்கத்தின் திசையை தீர்மானிக்கும் மிக முக்கிய பிரஜைகளாகவும் அதிகாரிகளாகவும் இருப்பது அவசியம். அரசாங்கத்தின் எதிர்கால நோக்கை இனங்கண்டு அவர்கள் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்படும் புதிய அமைச்சரவை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கியுள்ளனர். இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேறாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம் எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது. புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவுப் பெற்றுள்ளது.

அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவிவகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர்.

தற்போது நாட்டில் தேங்காய்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதற்கு குரங்குகள் மாத்திரம் காரணமல்ல. குரங்குகள் அவற்றை சேதப்படுத்துவதற்கு முன்னரே தேங்காய் விளைச்சளில் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. எனினும் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படு வருகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »