பாலஸ்தீனிய குழந்தை ஹிந்த் ரஜாபை கொலை செய்து உடலை இழிவுபடுத்திய இஸ்ரேலிய சிப்பாய் கால் ஃபெரன்புக் - Gal Ferenbook இப்போது இலங்கையின் கொழும்பில் இருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட NGO ஹிந்த் ரஜப் அறக்கட்டளை குற்றம் சாட்டியுள்ளது.
பாலஸ்தீனிய குடிமக்களைக் கொல்வதில் இவன் புகழ்பெற்றவன் என்பதால் இவனை "டெர்மினேட்டர்" என்று அழைக்கப்படும். இவனுடைய இயற்பெயர் Gal Ferenbook - ஃபெரன்புக் எனவும், Gal Ferenbook ஐ கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசிசி) ஒத்துழைக்குமாறு இலங்கை அதிகாரிகளை முறைப்படி வலியுறுத்தியதாகவும் குறித்த அறக்கட்டளை கூறியுள்ளது.
மேலும் சர்வதேச ரெட் நோட்டீஸ் வெளியிட இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 9, 2024 அன்று, ஃபெரன்புக், இஸ்ரேலின் கோலானி படையில் காசாவில் உள்ள மெர்காவா டேங்கில் இருந்து மரணித்த பாலஸ்தீனிய குழந்தையின் எச்சங்களைப் பார்ப்பதைக் காட்டும் வீடியோவை தனது Instagram கணக்கில் வெளியிட்டார்.
இலங்கை அதிகாரிகள், ஐசிசி மற்றும் இன்டர்போல் ஆகியவை நீதியை உறுதிப்படுத்த விரைந்து செயல்பட வேண்டும்" என்று அறக்கட்டளை கூறியது.
எவ்வாறாயினும், பொது பாதுகாப்பு அமைச்சின் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை தொடர்பு கொண்ட போது, இந்த விடயம் தொடர்பில் அமைச்சுக்கு குறிப்பிட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.