Our Feeds


Tuesday, December 10, 2024

SHAHNI RAMEES

மாணவர்களுக்கான இலவச சீருடை துணியை வழங்கியது சீனா!

 



சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த

பாடசாலை சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.



கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் அதிகாரிகள், சீனத் தூதுவர் சி ஜான் ஹோங் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர், 


இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுமார் 5.2 பில்லியன் ரூபா பெறுமதியான 11.28 மில்லியன் மீற்றர் துணிகள் பரிசாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.


இந்த சீருடைகள் 10,096 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் வழங்கப்படும்.


கல்வி அமைச்சினால் 1992 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த சீருடைகள் வழங்கப்பட்டு வருவதுடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாடசாலை சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.


மீண்டும் 2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடம் இருந்து தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டன.




ஆனால் கோவிட்-19 தொற்றுநோயால் நாடு எதிர்கொண்ட பொருளாதார நிலைமை காரணமாக, சீன மக்கள் குடியரசு 2023 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ சீருடைத் தேவையில் 70% மானியமாகவும், மீதமுள்ள 30% உள்ளூர் புடவை உற்பத்தியாளர்களிடமிருந்தும் வாங்கியது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »