Our Feeds


Monday, December 9, 2024

SHAHNI RAMEES

ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது - நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள்!

 


இலங்கையில் தடை செய்யப்பட்ட குழுவான ஆவாவின்

தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றார்.


இலங்கையிலிருந்து பிரான்சிலிருந்தும் தப்பியோடிய பின்னர் அவர் இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.


2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை தொடர்பிலும் மற்றைய ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரசன்னாவை நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கனடாவின் நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.


அஜந்தன் சுப்பிரமணியம் எனவும் அழைக்கப்படும் பிரசன்னா நாகலிங்கம் இலங்கையின் ஆவா குழுவின் தலைவர் என கருதப்படுகின்றார் என ஸ்டார்பார்வையி;ட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


ஆவா என்பது இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் இயங்கிய தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழு.


ஆவா குழு தனது போட்டி குழுவான எல்சி போய்ஸ் என்ற குழுவை இலக்குவைத்து தாக்குதலில் ஈடுபட்டது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரான்ஸ் தலைநகரின் வடபகுதி புறநகர் பகுதியில் உள்ள லகோர்னவை தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்காக இந்தஇரண்டு குழுக்களும் மோதலில் ஈடுபட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


நாகலிங்கமும் அவரது ஐந்து சகாக்களும் தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு கத்திகள் உட்பட கூரான ஆயுதங்களை பயன்படுத்தி 2022 செப்டம்பர் 22ம் திகதி  லகோர்னவ் பகுதியில் வாகனத்திலிருந்த இருவரை தாக்கியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »