Our Feeds


Tuesday, December 17, 2024

Zameera

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்களின் பெயர்கள் வெளியீடு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதை மையமாகக் கொண்ட இந்நிதியை பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் தெரிவித்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ரூ. 11 மில்லியன் ஐப் பெற்றுள்ளதுடன், ராஜித சேனாரத்னவுக்கு ரூ. 10 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹாரே ரூ. 2.2 மில்லியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவரது மகன் ரஞ்சித் அலுவிஹாரே ரூ. 4.6 மில்லியன் நிதியையும் பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு ரூ.30 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித் சொய்சா ரூ. 18 மில்லியன் ஐப் பெற்றுள்ளதுடன், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா ரூ. 2.7 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளார்.

ஜோன் அமரதுங்க ரூ. 4 மில்லியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க ரூ. 3 மில்லியன் மற்றும் விதுர விக்கிரமநாயக்க ரூ. 1.5 மில்லியன் ஐயும் பெற்றுள்ளனர்.

மேலும், மனோஜ் சிறிசேன , தயாசிறி ஜயசேகர , பி.ஹரிசன் , பி.தயாரத்ன , மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா , பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்த நிதியில் இருந்து அண்மைய ஆண்டுகளில் உதவிகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நிதியச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே ஜனாதிபதி நிதியத்தின் தலைவராக செயற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »