Our Feeds


Wednesday, December 11, 2024

Zameera

போக்குவரத்து அமைச்சின் வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல்


 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பின் கீழ் வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் நிதி மஹிந்த சிறிவர்தன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »