நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பயிர் சேத மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக சபை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இருந்து இறுதி அறிக்கை கிடைத்தவுடன் இழப்பீடுகள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பயிர் சேத மதிப்பீடுகள் நாளை மறுதினம் நிறைவுபெறும் அதேவேளை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் மதிப்பீடுகள் டிசம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவியுடனும் விவசாய அமைப்புக்களின் பங்களிப்புடனும் வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களை மதிப்பிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சபை தெரிவித்துள்ளது.