Our Feeds


Sunday, December 29, 2024

SHAHNI RAMEES

அனுமதியின்றி 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!


இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன்

அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.


கடந்த 27ஆம் திகதி காலை வரை 72,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விரைவாக விடுவிக்க உணவுப் பரிசோதகர்கள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுங்கத்துறை விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அதன் மேலதிக பணிப்பாளரும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.


நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »