கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் 7,412 பேர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் 493 மட்டுமே அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.
இந்தநிலையில், தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த 527 வேட்பாளர்களில் 434 பேர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.