தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லொறி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி, எதிர்பாராவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது