2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.
கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.
Wednesday, December 18, 2024
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு - பிரதமர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »