மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடான
கொங்கோவின் இகியுடர் மாகாணத்திலுள்ள புசிரா ஆற்றில் நேற்று இரவு படகு கவிழ்ந்து38 பேர் உயிரிழந்துள்ளனர்.கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட150க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊருக்கு படகில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.
இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம்.