இலங்கையைச் சேர்ந்தவரும், அவுஸ்திரேலியாவில்
வசிப்பவருமான தினுஷ் குரேராவுக்கு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா உயர்நீதிமன்றம் 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.தினுஷ் குரேரா கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி மெல்பேர்னில் உள்ள இல்லத்தில் அவரது மனைவி நெலோமி பெரேராவை கோடரியினால் தாக்கி படுகொலை செய்ததுடன், அக்கொலையை தற்பாதுகாப்பின் நிமித்தம் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் விக்டோரியா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தினுஷ் குரேராவினால் கூறப்பட்ட காரணங்களை நிராகரித்த நீதிமன்றம், கடந்த ஓகஸ்ட் மாதம் அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது.
இந்நிலையில் மேற்படி கொலையை 'மிகமோசமான' படுகொலை என வர்ணித்திருக்கும் விக்டோரியா உயர்நீதிமன்ற நீதிபதி அமன்டா ஃபொக்ஸ், இக்குற்றத்துக்காக தினுஷ் குரேராவுக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.