முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப்படகொன்று கரையொதுங்கியுள்ளது. அப்படகில் மியன்மார் நாட்டின் 102 பிரஜைகள் உள்ளதாகவும், இதில் 35 பேரளவில் சிறுவர்களெனவும், கர்ப்பிணிகள், முதியவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் சொல்லப்படுகின்றது.
குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,குறித்த கப்பலில் இருக்கும் அகதிகளை அப்பகுதி மீனவசங்கத்தினருடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
இலங்கை அரசு இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்...