இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்திற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது ஆலோசனைகள் டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கும் என அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்ட திருத்தத்தில் எவ்வித மாற்றமும் இன்றி தற்போதுள்ள மின்சார கட்டணத்தை தக்கவைக்க இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது.
CEBயின் முன்மொழிவு மற்றும் பரிந்துரைகள் குறித்து PUCSL இன் நிரந்தர ஊழியர்களால் ஆலோசனைகள்/கருத்துகள் முன்வைக்கப்படுவதுடன் பொது மக்கள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது கலந்தாய்வு குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஜனவரி 8, 2025க்கு முன் பின்வரும் ஊடகங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்: மின்னஞ்சல் -info@pucsl.gov.lk ,
WhatsApp - 076 427 1030,
Facebook - www.facebook.com/pucsl
அல்லது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, BOC வணிகக் கோபுரம், தளம் 6, புனித மைக்கேல் வீதி, கொழும்பு 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.