கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 13,183 பேரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் மற்றும் மருத்துவ கோட்பாடுகளின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் இறந்த ஒவ்வொருவரின் இறப்புச் சான்றிதழின் எண், இறப்பு பதிவு செய்யப்பட்ட நாள் மற்றும் மாவட்டத்தை தனித்தனியாக வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்.
Tuesday, December 17, 2024
13,183 சடலங்கள் தகனம் செய்யப்பட்டது - சுகாதார அமைச்சர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »