ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து
தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரனி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.வேட்புமனுவில் அவரது தந்தை கையெழுத்திட்டாலும், இறுதிப் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்திலிருந்து 21 வருடங்களாக பாராளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத பின்னணியில் தான் பெற்ற வெற்றி மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறுகிறார்.