Our Feeds


Monday, November 18, 2024

Sri Lanka

ஜனாதிபதி சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் - முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமை பற்றி NPP, MP டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ்



ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தேசிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஒரு நபரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் அறிவு என்பனவே ஒரு அமைச்சை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை..  தவிர அவரது பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி கருதுகிறது


மற்றவர்களை விட அவர்களின் திறன்கள் மற்றும் பங்களிப்புகள் குறித்து அதிக நுண்ணறிவு கொண்ட ஒருவராக அவர் காணப்படுகின்றார்.


மதத்தின் அடிப்படையில் மட்டுமே அமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேவையற்ற பிளவுகளை தூண்டிவிட்டு நாம் முன்னேற வேண்டிய ஒற்றுமையையே குலைத்துவிடும் அபாயம் உள்ளது.


மத, இன வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் நம்பியதன் காரணமாகவே நாங்கள் NPP யை தெரிவு செய்தோம்.


குறிப்பிட்ட அமைச்சுக்களை யார் வகிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம் என்ற பிரிவினையான விவாதங்களால் திசை திருப்பப்படாமல் முடிவுகளை வழங்குவதற்கான இடத்தை இந்த அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் அந்த நம்பிக்கையை மதிப்போம்.


நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »