Our Feeds


Monday, November 18, 2024

SHAHNI RAMEES

பாராளுமன்ற வரலாற்றை மாற்றியமைத்த சுகத் வசந்த டி சில்வா! - கண்பார்வையற்ற MP


இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக

விழிப்புலனற்றவர் என்ற வகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார்.


இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.


பலப்பிட்டிய, கொடகெதர பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி பிறந்த இவருக்கு தற்போது 57 வயதாகும்.


ஐந்தாம் வகுப்பில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அவர் கண்ணில் பந்து பட்டதால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.


இந்த விபத்தின் பின்னர் சுகத் முற்றிலும் பார்வையற்றவராகி, அதன் பின்னர் மேலதிக கல்விக்காக இரத்மலானை பார்வையற்றோர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.


அதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தியடைந்த சுகத் வசந்த டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் வழிகாட்டி அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.


பின்னர், சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியாக 25 வருடங்கள் நீண்ட சேவையாற்றிய சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.


உயர்தர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே மக்கள் விடுதலை முன்னணியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த சுகத் வசந்த, தனது அரசியல் வாழ்க்கையில் தற்போது 40 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »