ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் கைப்பேசிகளின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்நாட்டில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் உற்பத்தி ஆலை தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்மூலம் அந்நாட்டில் வேலைவாய்ப்பும் உள்நாட்டு பொருளாதாரமும் உயரும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.
அவ்வகையில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழிற்சாலை தொடங்க நெருக்கடி கொடுக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.