பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை
நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் தேர்தல் தகராறு தீர்க்கும் நிலையமும் பதுளை பொலிஸாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.