(பாறுக் ஷிஹான்)
ஜனாஸா எரிக்கும்போது நீங்கள் எங்க வாப்பா இருந்தீங்கள்? இப்போது வந்து பாட்டு படிக்கிறீங்க? ஜோக் எல்லாம் அடிக்கிறீங்க? கேலி கிண்டல் செய்றீங்க?என 'வி ஆ வண்'( WE ARE ONE ) அமைப்பின் இணைப்பாளர் முகம்மட் ரஸ்மின் கேள்வி எழுப்புகிறார் .
அம்பாறை ஊடக மையத்தில் பொதுத் தேர்தல் சமகால அரசியல் தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆனால் ஜனாஸா எரிக்கின்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள். சீலை கட்டிய போராட்டம் எதுக்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அது உங்களுக்கு கிண்டலா? ஜனாஸாவை எரித்தது உங்களுக்கு கேலியா? கோட்டாவுக்காக கடைக்கு போய் கோட்டாவுக்கு கூஜா தூக்கி கோட்டாவுக்கு வால்பிடித்து அவரோடு நீங்கள் இருந்தீர்கள். சீலை கட்டி போராட்டம் நடத்தியவர்களை கிண்டல் செய்கின்றீர்களா? கேலி செய்கிறீர்களா? வெட்கப்பட வேண்டாமா? மன்னிப்பு கேட்க வேண்டாமா?
அம்பாறை மாவட்ட மக்களிடம் தற்போது கேட்கின்றேன். இந்த வெட்கம் கெட்டவர்கள் துரோகிகளை மீண்டும் மீண்டும் மேடையை அழைத்து அழகு பார்க்க வேண்டாம். இன்றைக்கு நாங்கள் அவ்வளவு முட்டாள்களா அவ்வளவு கேவலம் கெட்டவர்களா? அவர் பேசுகின்ற பேச்சுகள் எல்லாம் மிகப்பெரிய துரோகங்களாக இருக்கின்றது. எனவே அதாவுல்லாஹ் அடக்கிப் பேச வேண்டும். ஜனாஸா எரிப்பு பற்றி கிண்டல் அடிப்பது கேலி செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்.
அவ்வாறு நிறுத்தாவிட்டால் அதாவுல்லாஹ்வின் வண்டவாளங்கள் கண்டிப்பாக தண்டவாளம் ஏறும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்ல அதாவுல்லாஹ் அப்படி உங்களுக்கு பெரிய ஒரு வாக்கு வாங்கி இருந்தால் ஏன் நீங்கள் வீடு வீடாக போய் வாக்குப்பிச்சை கேட்டு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்படியெல்லாம் போற ஆள் கிடையாதே. இப்ப வீடு வீடா வாக்கு கேட்டு போகிறீர்கள். நீங்கள் சரியான ஆளாக இருந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஓடிப்போய் இருக்க வேண்டும்.
நீங்கள் ரணில் ஏறுகின்ற பஸ்ஸில் ஏற மாட்டேன் என சொன்னீங்களா இல்லையா. இப்போது ரணில் இருக்கின்ற பஸ்ஸிலே மட்டுமா இருக்கிறீர்கள். ரணில் அணிந்த கோட்டையும் அல்லவா கேட்கிறீர்கள்?
அதாவது 20 ஆவது சட்டம் மாபெரும் சட்டம்.அது மக்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்கள் தானே .அந்த சட்டம் எங்களுக்கு தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு தலைவர் . உங்கள் சட்ட நுணுக்கத்தின் இலட்சனத்தை நாங்கள் கூற விரும்புகின்றோம். கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நீங்கள் முதலாவது பாராளுமன்றத்துக்கு சென்றீர்கள்.அங்கு சென்ற உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறான ஆடை அணிய வேண்டும் என்று தெரியவிலலையா . உங்களை ஆதரித்த கோட்டாவின் ஆட்கள் உங்களை மீண்டும் ஆடையை மாற்றி அணிந்த வாருங்கள் என வெளியே அனுப்பவில்லையா?
பாராளுமன்றத்தின் ஆடை புரட்டக் கோள் உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் 20ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு எங்களுக்கு பாடம் எடுக்க வாரீங்களா? முதலாவது அதாவுல்லாஹ் அவர்கள் இந்த விவகாரங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.