ஜனாஸா எரிப்புக்கு துணை போன உங்களுக்கே இவ்வளவு திமிரு என்றால், அதை எதிர்த்துப் பேசும் எமக்கு எவ்வளவு திமிரு இருக்கும்? - கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களுக்கு ரஸ்மினின் பதிலடி
கோட்டாவை எதிர்த்து மக்களிடம் வாக்குக் கேட்டு, கோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என வாக்குறுதி கொடுத்து வென்று விட்டு பாராளுமன்றில் சென்று அதே கோட்டாவுக்கு 20ம் திருத்தத்திற்காக கையுயர்த்தி வாக்களித்து ஜனாஸா எரிப்புக்கு துணை போன நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் வெட்கமில்லாமல் தேர்தல் களத்தில் நின்று திமிராக மீண்டும் பேசும் போது, அன்றும் இன்றும் ஜனாஸா எரிப்புக்கு துணை போன துரோகிகளுக்கு எதிராக பேசிவரும் எமக்கு எவ்வளவு திமிரு இருக்க வேண்டும்? என சம்மாந்துறையில் “நல்லாட்சிக்கான தேசிய முன்னனி”யின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது சமூக செயல்பாட்டாளர் சகோதரர் ரஸ்மின் MISc கூறினார்.
நேற்று 10.11.2024 சம்மாந்துறை ஹிஜ்ரா சந்திக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் மு.க மற்றும் அஇமக வை சேர்ந்த எம்.பிக்கள் செய்த சமூக துரோகங்கள், முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டு பேசினார் ரஸ்மின். அப்போது அங்கே வந்த முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூரின் ஆதரவாளர்கள் சிலர் கூட்டத்தை குழப்ப முற்பட்ட நேரத்தில் பகிரங்க மேடையிலேயே பதிலடி வழங்கினார் ரஸ்மின்.
இந்தக் காட்டுக் கூச்சலுக்கும், சலசலப்புக்கும் அஞ்சுகிற ஆட்கள் நாங்கல்ல. அதற்கு வேறு கூட்டத்தை பார்த்துக் கொள்ளுங்கள். ஜனாஸா எரிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த துரோகிகளுக்கு எதிராக ஊர் ஊராக வந்து பேசுவோம் என சொல்லி வந்தோம். அந்த வகையில் தான் இங்கும் வந்துள்ளோம். நீங்கள் கத்தியவுடன் பயந்து ஓடுவதற்கு நான் என்ன உங்களை போன்ற அரசியல்வாதியா? மடியில் கணமில்லை. வழியில் பயமில்லை. நான் சமூக துரோகம் செய்ததுமில்லை. மு.க அஇமக முன்னாள் எம்.பிக்களை போல் ஜனாஸா எரிப்புக்கு துணை போனதுமில்லை. ரவுப் ஹக்கீமை போல் ஜனாஸா எரிப்புக்கு துணை போனவர்களுக்கு பதவி பட்டங்களை வழங்கி சமூகத்தை இழிவுபடுத்தியவனுமில்லை. “பார் லைசன்” எடுத்தவனுமில்லை.
எனவே, உங்கள் லட்சனங்களை சொல்ல முழு தகுதியும் எனக்கு இருக்கிறது. என்று பகிரங்க மேடையில் ரஸ்மின் பேசியது அங்கிருந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் தந்தது
“நீங்க பேச வந்த அனைத்தையும் பேசுங்க. யார் எதிர்க்கிறார்கள் என்பதை நாங்க பார்க்கிறோம்” என்று சப்தமிட்ட இளைஞர்களின் பேச்சுக்கு நடுவில் இடை விடாமல் அத்தனை துரோகங்களையும் பட்டியலிட்டார் ரஸ்மின்.
இந்தத் தேர்தல் நமக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும். நமக்கான குரல்களை, நமக்கான உரிமையுடன் பாராளுமன்றம் அனுப்பும் தேவை நமக்குண்டு. எனவே கடந்த காலத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.
பெரும்பான்மை மக்கள் 75 ஆண்டுகால சாபத்திற்கு முடிவு கட்டிவிட்டார்கள். நாம் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வந்த நமது முன்னாள் எம்.பி க்கள் செய்த 25 ஆண்டு கால துரோகத்திற்கு முடிவு கட்டும் நாள் தான் 14ம் திகதி எனவே, முன்னர் நடந்த பிழைகளை சுட்டிக்காட்டிய நாம் அதனை சரி செய்யும் விதமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி சார்பில் இரட்டைக் கொடி சின்னத்தில் அம்பாறை, புத்தளம், மன்னார், களுத்தரை ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.
எம்மிடம் பணமில்லை, பொருளாதார வசதியில்லை. உண்மையும், நேர்மையும், துணிவும், தைரியமும், சமூகத்திற்காக உரத்து குரல் கொடுக்கும் ஆற்றலும் இருக்கிறது. எனவே இந்த சமூகத்திற்கான எம்.பி க்கள் வேண்டும் என்றால் எமது வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இதனை வாக்குப் பிச்சையாக கேட்க்க வில்லை. அந்தத் தேவையும் எமக்கு இல்லை. இதை உரிமையாக கேட்கிறோம். என்றார்.
இன்னும் எவ்வளவு நேரம் எடுத்தென்றாலும் பேசுங்கள் நாம் கேட்க்கத் தயார் என இளைஞர்கள் கூறிய நிலையில் பொலிசாரின் வழிகாட்டல் படி பொதுக் கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.