முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கான பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கான பாதுகாப்பு 30 பேர் வரையில் குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
நா.தினுஷா