கட்டாரில் மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது ஏ.கே. டிண்டெக்ஸ் நிறுவனம்
கட்டார் நாட்டில் அமையப்பெற்றுள்ள ஏ.கே. டிண்டெக்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகக் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
பிரமாண்டமான முறையில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழாவில், விசேட அதிதியாக ஸ்கை தமிழ் ஸ்தாபகப் பணிப்பாளர் ஜே.எம். பாசித் கலந்து கொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் குர்சித் மன்சூர் மற்றும் அஜ்மீர் ஆகியவரகளுடன் இணைந்து ஏ.கே. டிண்டெக்ஸ் நிறுவனத்தினை திறந்து வைத்தார்.
இதில் கடல் கடந்து வந்து கட்டார் நாட்டில் பணி புரியும் இலங்கை மற்றும் பிற நாடுகளை சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.