சுகயீனம் காரணமாக சிறைச்சாலை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.