2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இலங்கை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.