Our Feeds


Tuesday, November 26, 2024

SHAHNI RAMEES

அமைச்சரவை நியமனத்தை - முஸ்லிம் சமூகம் இன மத அடிப்படையில் நோக்ககூடாது!

 


ஐக்கிய இலங்கையை ஸ்தாபிக்கும் நோக்கத்துடனேயே நாங்கள் புதிய அமைச்சரவை உருவாக்கியுள்ளோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,




தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனமொழி சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை. அமைச்சரவையை கையாளக்கூடிய மிகத்திறமை வாய்ந்த தனிநபர்களையே நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.

மேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் நியமிக்கப்பட்டுள்ளார், பிரதி சபாநாயகர் பிரதி அமைச்சர் பதவிகளை முஸ்லிம்களிற்கு வழங்கியுள்ளோம்.


மேலும் தேசிய பட்டியல் மூலம் முஸ்லிம் ஒருவருக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளோம். நாங்கள் இலங்கை முழுவதிற்கும் சேவையாற்றுவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம் இன மத மொழி அடிப்படையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையை முஸ்லிம் சமூகம் இன மத அடிப்படையில் நோக்ககூடாது.


ஐக்கிய இலங்கையை ஸ்தாபிக்கும் நோக்கத்துடனேயே நாங்கள் அமைச்சரவையை அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »