Our Feeds


Monday, November 18, 2024

SHAHNI RAMEES

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை!

 




புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.




அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.


01.கல்வி , உயர்கல்வி , தொழிற்கல்வி அமைச்சராகவும் பிரதமர் ஹரிணி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.


02.விஜித ஹேரத் வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.


03.பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

04.பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


05.சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு.


06.கே.டி.லால்காந்த - விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சு.


07.அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைச்சு.


08.இராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு.


09.பேராசிரியர் உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்அமைச்சு.


10.சுனில் ஹந்துன்நெத்தி - கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சு.


11.ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகாரம்.


12.பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சு.


13.பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி - புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.


14.சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி 


15.நளிந்த ஜெயதிஸ்ஸ - சுகாதாரம் , ஊடகம்  


16.சுனில் குமார கமகே - இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை 


17.வசந்த சமரசிங்க - வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு 


18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன - விஞ்ஞானம் , தொழிநுட்பம் 


19.பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - தொழில் 


20.குமார ஜெயக்கொடி - வலுசக்தி 


21.தம்மிக்க பட்டபெந்தி - சுற்றாடல் 


























இதேவேளை 21 அமைச்சர்களும் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி முன்னிலையில் பொதுவாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவிருக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »