Our Feeds


Friday, November 8, 2024

Zameera

போலியாக விளம்பரப்படுத்தப்படும் க்ரீம் வகைகளை நம்பி ஏமாற வேண்டாம்


 சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் சருமத்தை பாதிக்கும் க்ரீம் வகைகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


சமூக வலைதளங்களில் பரவும் பல வகையான அழகுசாதனப் பொருட்களால் பல்வேறு ஒவ்வாமைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

பல்வேறு தோல் நோய்களுக்கு சரியான வைத்திய ஆலோசனையின்றி பலவிதமான மருந்து களிம்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உள்ளூர் மற்றும் மேற்கத்திய மருந்து களிம்புகளைப் பயன்படுத்த பலர் பழகிவிட்டனர்.


தோல் பூஞ்சை தொற்று, முகப்பரு மற்றும் கருமையான தோல் நிறமாற்றம் ஆகியவற்றிற்கு, மருத்துவ ஆலோசனையின்றி அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால், தோல் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »