Our Feeds


Thursday, November 28, 2024

SHAHNI RAMEES

அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற உத்தரவு!

 


வாகன விபத்து ஒன்று தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட

வழக்கு நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.


அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கு யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டிருந்தார்.


பேஸ்லைன் வீதியில் 22.03.2021 வாகன விபத்தொன்றில் சாரதியொருவர் பலத்த காயங்களுக்குள்ளாக வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »