Our Feeds


Wednesday, November 13, 2024

Zameera

வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்


 பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகையில்,

வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்டரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதிகளை தங்களது தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
வாக்கெடுப்பு நடைபெறுகின்ற கட்டடத்தின் தூரம் 100 மீற்றருக்கும் அதிகமாக இருப்பின் வாக்கெடுப்பு நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்ல முடியும்.

வாக்கை அடையாளமிட முடியாதவர்களுக்கு வாக்குச் சீட்டிற்கு வழிகாட்டும் தொடுகை சட்டகம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்யப்படும்.

தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குச் செல்லுபடியான அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க முடியும்.

வாக்கெடுப்பு நிலையத்தின் வளாகத்தில் காட்சிப்படுத்தப்படுகின்ற அறிவித்தல்களைச் சைகை மொழி மூலமான உருவப் படங்களுடன் காட்சிப்படுத்தல்.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் போது சைகை மொழிபெயர்ப்புடன் வெளியிடல் போன்ற விடயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »