மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் பெய்யக்கூடும்.
அத்துடன் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.