அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 22ம் திகதி இடம்பெற்றது.
அங்கு கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
நாங்கள் ஜாதி அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றை கேட்கவில்லை எனவும் தங்களது பிரச்சினையை அமைச்சரவையில் தெரிவிக்கும் போது அதை புரிந்துகொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்களே என முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்... "அப்படி கேட்காதீர்கள், அது தவறு...2004ல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான் தான் செய்தேன்"
"நாம் அப்படி இல்லை. இவற்றை செய்தவதற்கு முஸ்லிம் அமைச்சர் தேவை இல்லை. மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்" என்றார்.