Our Feeds


Friday, November 22, 2024

SHAHNI RAMEES

தரமற்ற மருந்துகள் இறக்குமதி! - முன்னாள் அமைச்சர்கள் சிலர் சி.ஐ.டி யில் ஆஜராகி வாக்குமூலம்.

 

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வியாழக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளனர்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க,

இன்று எம்மை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் வந்து தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கினோம். அத்துடன் சுகாதார அமைச்சுப் போலவே விளையாட்டுத்துறை அமைச்சிலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளது இது சம்பந்தமாக நான் ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணை களத்திற்கு முறைப்பாடு வைத்திருந்தேன்.

இப்பொழுது புதிய அரசாங்கம் வந்துள்ளது அதை வரவேற்கின்றோம் ஆனாலும் பழையவர்களும் இருக்கின்றார்கள்.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்குவதற்கு என்னிடமும் ஊழல்வாதிகளின் அறிக்கை ஒன்று உள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »