நிர்மாணித்து நிறைவுசெய்யப்பட்ட 243 வீடுகளை,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனங்களினூடாக இந்த வீடுகளை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேபோன்று, அஸ்வெசும நிவாரணம், காணி வழங்கல், சமய வழிப்பாட்டிடங்களில் சூரிய மின் சக்தி திட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.