Our Feeds


Wednesday, November 20, 2024

SHAHNI RAMEES

சிலிண்டரின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தான்! - தேர்தல் ஆணைக்குழு!



புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல்

உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பான சர்ச்சைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அப்பாற்பட்டது. கட்சியின் உள்விவகாரங்களில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.


 

கட்சியின் செயலாளரால் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு தனது கடமையை நிறைவேற்றியுள்ளது.


 


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


 


ரவி கருணாநாயக்கவை தேசியப் பட்டியலில் எம்.பி.யாக நியமிப்பது குறித்து தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார். எனினும், இந்த நியமனம் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »