இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
அர்ஜுன மகேந்திரனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய வங்கியில் கடந்த 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது அரசாங்கத்துக்கு சொந்தமான 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராக அர்ஜுன மகேந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.