கலென்பிந்துனுவெவ- மஹசென்கம பிரதேசத்தில் நேற்றைய தினம் (29) காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
69 வயதுடைய மஹசென்கம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.