முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட
கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை, தமது நிறுவன நடவடிகைகளை முன்னெடுத்து செல்வதற்காக வாடகைக்கு பெற்றுதருமாறு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள்நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தொழில் அமைச்சிடம்
தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.
சுமார் பத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை வாடகைக்கு பெற்றுத்தருமாறு கோரியுள்ளதாக அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு இயங்கி வரும் பத்து நிறுவனங்களால் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்த கோரிக்கைகள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும், கோரிக்கைகளை அரசிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.