தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் செல்லுபடியாகும்
காலம் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடையுமென மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க அறிவித்துள்ளார்.நிரந்தர இலக்கத் தகடுகளை வழங்குவதில் திணைக்களம் எதிர்கொண்ட சிக்கல்கள காரணமாக தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் வழங்கப்பட்டதுடன், தற்போது வாகன இலக்கத்தகடு வழங்குவதிலுள்ள சிக்கல் தீர்க்கப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த காலக்கெடுவிற்கு முன்னர் தமது நிரந்தர இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 15ம் திகதிக்கு பிறகு தற்காலிக இலக்கத்தகடுகள் வைத்து வாகனங்களை செலுத்துவவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.