திருகோணமலை - கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் நாளை (07) 16 மணிநேர நீர் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த நீர் துண்டிப்பு
அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் நீர் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.